சென்னை: தன்னைக் காண வீடு தேடி வந்த நடிகர் சிவக்குமார் குறித்து உருக்கமான பதிவு போட்டுள்ளார் நடிகை ராதிகா சிவக்குமார்.
திரையுலகில் பாச மலர்களாக பலர் வலம் வருவார்கள். அந்த வரிசையில் காலம் காலமாக முதலிடத்தில் இருப்பவர்கள் சிவாஜி கணேசன் - சாவித்திரி தான். இந்த பாச மலர்களைப் போல ஒரு அண்ணன் தங்கைப் பாசத்தை அதற்கு முன்பும் கூட பெரிதாக யாரும் பார்த்ததில்லை. பிறகும் கூட வந்ததில்லை. திரையிலும் பாசத்தைக் கொட்டிய இவர்கள் நிஜத்திலும் கூடப் பிறந்த அண்ணன் தங்கையாகவே வாழ்ந்து முடிந்தவர்கள்.
சிவாஜி - சாவித்திரிக்கு அடுத்து என்று சொன்னால் அது சிவக்குமார் ராதிகாதான். இவர்கள் இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு அந்த அளவுக்கு வலுவானது. உணர்வுப்பூர்வமானது. திரையில் அண்ணன் தங்கையாக நடித்த இவர்கள் நிஜத்திலும் அப்படியே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அண்ணே என்று ராதிகா ஓடிச்செல்வத்தையும் பாசத்துடன் வாஞ்சையாக சிவக்குமார் பேசுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.

நடிகர் சங்கத் தேர்தலின்போது சிவக்குமார் குடும்பம் ஒரு பக்கமும், ராதிகா, சரத்குமார் மறுபக்கமுமாக பிரிந்து நின்று கடுமையாக வார்த்தைகளை விட்டுப் பிரச்சாரம் செய்து மோதிக் கொண்ட போதும் கூட இந்த அண்ணன் தங்கை பந்தம் பாதிக்கப்படவில்லை. இன்று வரை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தைப் பொழிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கால் வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகை ராதிகாவை சந்திக்க அவரது வீடு தேடி வந்தார் சிவக்குமார். அவரை வரவேற்று மகிழ்ந்த ராதிகா, நீண்ட நேரம் பேசி மகிழ்ந்துள்ளார். கையோடு தனது ஓவியங்களின் தொகுப்பையும் கொண்டு ராதிகாவிடம் கொடுத்து விளக்கி மகிழ்ந்தார் சிவக்குமார்.
வீடியோ: சிவக்குமார் - ராதிகா சந்திப்பு
இதுகுறித்து ராதிகா கூறுகையில், சிவக்குமார் அண்ணனுடனான பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும். என்னைப் பார்க்க வந்திருந்தார். நிறைய படங்கள் ஓவியங்கள், எங்களது திரைப்பயணம் தொடர்பான படங்களையும் கொண்டு வந்து காட்டினார் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.
நடிகை ராதிகா சமீபத்தில் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்காக அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}