சென்னை: நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கும் மாறும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சின்னத்திரையில் கனா காணும் காலம் சீரியல் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீ வெள்ளித்திரையில் வழக்கு எண் 18 கீழ் 9 திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் அடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் மூலம் புகழ்பெற்றார். இறுதியாக நடிகர் ஸ்ரீ நடிப்பில் வெளியான இறுக்கப்பற்று திரைப்படமும் பல்வேறு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு சமீப காலமாகவே வாய்ப்புகள் எதுவும் இன்றி, ஸ்ரீ நடிப்பில் படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ யின் உடல்நிலை குறித்து சோசியல் மீடியாக்களில் வினோதமான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பல்வேறு பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த வீடியோக்களில் நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நடிகர் ஸ்ரீக்கு என்னாச்சு என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் அதற்கு முற்றுப் வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில்,
நடிகர் ஸ்ரீ தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம்.அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
{{comments.comment}}