முதல் படத்திலேயே மிரட்டும் மீரா மஹதி.. வித்யாசாகர் இசை.. சூர்யா ரிலீஸ் செய்த பர்ஸ்ட் லுக்!

Jan 29, 2024,10:52 AM IST

சென்னை:  முதல் படத்திலேயே சூப்பரான விஷயங்கள் நடப்பது எல்லோருக்கும் வாய்க்காது.. அறிமுக இயக்குநர் மீரா மஹதிக்கு அது டபுள் டக்கராக கிடைத்திருப்பது உண்மையிலேயே.. லக்கிதான்.. அட படத்தோட பேரும் கூட "டபுள் டக்கர்"தான்!


இயர் ஃபிளிக் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள டபுள் டக்கர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தை இயக்கி அறிமுகமாகிறார் மீரா மஹதி.


அந்தக் காலத்தில்,  முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். ஆனால் தற்போது இந்த சூழ்நிலை முறியடிக்கப்பட்டு நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்து வருகின்றனர். சிறந்த கதைகளை கொண்ட சிறந்த படங்களுக்கு விமர்சனங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. 




குறிப்பாக நல்ல கதைகளை கொண்ட படங்களாக இருந்தால் மக்கள் அதனை ரசிக்கத் தவறுவதில்லை.  அங்கீகாரம் அளிக்க தவறியதில்லை. அந்த வகையில் நடிகர் தீரஜ் நடிப்பில், சிறந்த கதையம்சம் கொண்டதாக, பேண்டஸி படமாக உருவாகியுள்ளது டபுள் டக்கர் திரைப்படம். இப்படம் அனைத்து அம்சங்களுடன் வயிறு வலிக்க சிரித்து சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளதாம். 


இப்படத்தில் இரண்டு அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் கதாநாயகன் தீரஜ் உடன் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாம். டபுள் டக்கர் படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, எம்.எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி ,சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தினை அறிமுக இயக்குனர் மீரா மகதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் மெல்லிசை மற்றும் இளமை துள்ளல்கள் பாடல்கள் சரியான கலவையாக  இருக்கும் என்பது உறுதி. இப்படத்தை இயர் ஃபிளிக் ப்ரொடக்ஷன்  நிறுவனம் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சந்துரு பணியாற்றியுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டதாம்.த ற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். மேலும் இப்படத்தினை விடுமுறை நாட்கள் ஆன மே மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.


இந்நிலையில் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில்  டபுள் டக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்