தவெக மாநாடு.. இப்படித்தான் நடத்தப் போறோம்.. நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய முக்கிய ஆலோசனை!

Sep 09, 2024,06:21 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த மாதம் இறுதிக்குள் தவெக கட்சி மாநாடு நடைபெற உள்ளதாகவும், இதற்கான பந்தல் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல்  ரீதியாகவும் சாதனை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படமே விஜயின் திரை பயணத்திற்கு கடைசி அத்தியாயம்.இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழு  அரசியல் பிரவேசம் காண இருக்கிறார் நடிகர் விஜய். 




இதற்கிடையே விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகள், நிர்வாகிகள் நியமனம், கொடி அறிமுகம், உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் மாநாடு நடத்த  தமிழக அரசிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. 


இது தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மாநாடு தொடங்கும் நேரம், இடம், மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள், எவ்வளவு பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர், உள்ளிட்ட 21 கேள்விகள் அடங்கிய,  நோட்டீசை அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்து.


இதனைத் தொடர்ந்து  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளுக்கும் எழுத்து வடிவிலான பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலனை  செய்த டிஎஸ்பி, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில்  விஜயின் வீட்டில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது விஜய் தலைமையில் தவெக மாநாட்டிற்கான பணிகள், பந்தல் அமைத்தல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து  தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டது.மேலும் மாநாட்டை இந்த மாத  இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் விஜய் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 


ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சித் தொண்டர்களை எவ்வாறு அழைத்து வர வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்