சென்னை: யோகி பாபு என்னிடம் சில கதைகள் சொல்லி இருக்கிறா். அவர் விரைவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஏஸ் பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஏஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஏஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், முதன்முதல்ல வர்ணம் படத்துல என்னைய நடிக்க ரெக்கமண்ட் பண்ணியது ஆறுமுககுமார் சார்தான். அவரை எப்போதும் மறக்க மாட்டேன். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல நடிக்க என்னை ரெக்கமண்ட் பண்ணியவரும் ஆறுமுககுமார் சார்தான்.
இருண்ட வீட்டுல அகல்விளக்கு எத்துற மாதிரி என்னோட வாழ்க்கையில் விளக்கு ஏத்தியவரு ஆறுமுககுமார் சார்தான். எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமா? எனக் கேட்போது வர்ணம் படத்துல நடிச்ச புகைப்படத்தைக் காமிச்சு உன் புள்ளைக்கு நடிக்க வருது. நல்ல வந்துருவேன்னு சொன்னேன். அதானல், நடிக்க எனக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்ததுக்கு நன்றி சார்.
சில பேரை எனக்கு பார்த்த உடனே பிடிக்கும். ஆனால் சில பேரை பிடிக்காது. அந்த மாதிரி இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜஸ்டினை எனக்கு பார்த்த உடனே பிடிச்சது. ரொம்ப சூப்பரா இந்நதப் படத்துக்கு இசையமைச்சுருக்காரு.
யோகி பாபு என்னிடம் சில கதைகள் சொல்லி இருக்கிறா். அவர் விரைவில் டைரக்டர் ஆக வேண்டும், அவர் இந்த படத்தில் 2வது ஹீரோ மாதிரி இருக்கிறார். அவரைப் பற்றி சில நெகட்டிவ் தகவல்கள் பரனுகின்றன. ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}