- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஸ்வா தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சென்னை வெள்ளத்தின்போதும் இதேபோல செய்தார் அவர் என்பது நினைவிருக்கலாம்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து மின்சாரம், குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் படாத பாடுபட்டு விட்டனர்.
பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஷ்வாவும் உதவிகள் செய்துள்ளார். தூத்துக்குடிக்குச் சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டூத் பேஸ்ட், பிரஷ், உடல் வலி மாத்திரைகள், ஓ ஆர் எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின் போன்ற பொருட்களை வழங்கினார்.
தனசேகர நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் பொருட்களை வழங்கிய போது அவர்கள் மிகுந்த நன்றியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்வா
பல இடங்களில் மின்சாரமும், குடிநீரும் வராத நிலையில் மக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.
எங்களது பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பும் போது உடல்நலம் சரியில்லாத குழந்தைகள் ,வயதான மூதாட்டி, உட்பட பலரை மீட்டுக் கொண்டு வந்தோம் .அப்போது அவர்கள் இங்கிருந்து வெளியே வந்தாலும் திரும்ப செல்ல முடியாத நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பாம்பு, பூச்சி ,அட்டை எல்லாவற்றுடன் எங்கு பள்ளம், எங்க மேடு என்று தெரியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம். நம்மால் இயன்ற உதவிகளான உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு முடிந்த அளவு ஆட்களை மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
அபி சரவணன் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாகசம், டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}