சென்னை: வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன். அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அவருடன் நடிக்காமல் விட மாட்டேன் என்று நடிகை தேவயானி ஷர்மா கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு குறித்து பல்வேறு விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் அவருக்கொன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

இப்போது, ஒரு நடிகை இவருடன் நடிப்பதை தன் லட்சிம் என்றே கூறியுள்ளார். யார்ரா அது என்று கூட்டத்தை விலக்கிப் பார்த்தால்.. அட நம்ம தேவயானி ஷர்மா!
டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில்
வலம் வந்து கொண்டு இருப்பவர். 2021 ஆம் ஆண்டு, ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவர்தான் சிம்புவுடன் சேர துடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும்.
கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும் என்று கூறியுள்ளார்.

பயங்கரமான சபதமா இருக்கேம்மா.. பார்க்கலாம்.. யாரு ஜெயிக்கிறாங்கன்னு.. யாரு ஜெயிச்சாலும் லாபம்தான்.. ரசிகர்களுக்கு!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}