சென்னை: அதிமுகவுக்கு, பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்று நடிகை கெளதமி கூறியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய நடிகை கெளதமி தற்போது அதிமுகவில் செயல்படுகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பிரதமர் அவர்கள் எப்போது இருந்து இங்கு அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார்கள். தேர்தல் அறிவித்த பிறகு தான் அவர் அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார். அதற்கு முன்னர் அவர் எத்தனை வருடம் ஆட்சியில் இருந்திருக்கிறார். 10 வருடம் அவர் ஆட்சியில் இருந்துள்ளார். இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மேலயும், தமிழ் மக்கள் மேலயும் அவ்வளவு பாசம் காட்டுகிறார் என்றால், கண்டிப்பாக அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும் என்பதனை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் புரிந்தும் கொண்டார்கள். பொதுமக்கள் பாரமர மக்கள் புரிந்து கொண்டார்கள். இணையதளம் என்றாலும், மக்கள் மத்தியில் என்றாலும் ஒரு நாலு பேருக்கிட்ட கேட்டாலே தெரிந்து விடும். மக்கள் இந்த விஷயத்துல தெளிவாக இருக்கிறார்கள். சந்தேகமே வேண்டாம். நம்ம எதிர்பார்த்த வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.
தேர்தலுக்கு அப்புறம் கூட்டணியில் சேர்வது என்பது ஒரு எடுபடாத பேச்சு. எடப்பாடி அண்ணன் அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர் தேர்தல் தொலை தூரத்தில் இருக்கும் போதே தமிழ் நாட்டின் மானம் மட்டும் இல்லாமல், கட்சியின் ஒவ்வொரு தொண்டரனின், அடி தொண்டனின் விருப்பம் என்று சொல்லி பல காரணங்கள் சொல்லி இருக்காங்க. காரணங்களை பல தடவை விளக்கி சொல்லி இருக்கிறார். சந்தேகமே இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}