சென்னை: நடிகை கெளதமியின் சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரத்தை பயன்படுத்தி மோசடியாக அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரையும் தமிழ்நாடு தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
நடிகை கெளதமிக்குச் சொந்தமான சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடியாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்து விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது பாஜகவில் இருந்து வந்த நடிகை கெளதமி, அழகப்பன் குறித்து கட்சித் தலைவர்களிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் கட்சியில் அழகப்பன் செல்வாக்கு அதிகம் இருந்ததால் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கெளதமி. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீடு, சென்னை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தீவிரமாக போலீஸார் தேடி வந்த நிலையில் திருச்சூரில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் தமிழ்நாட்டுக்கு அவர்கள் கொண்டு வரப்படவுள்ளனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}