மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு.. கையோடு இட்லி, கெட்டி சட்னியை ஒரு கை பார்த்த ஹன்சிகா!

Oct 06, 2024,04:30 PM IST

மதுரை: என்ன  சொல்லுங்க.. நம்ம தமிழ்நாடு போல வருமா.. அதிலும் மதுரை போல வரவே வராதுங்க.. அட இதை நாம சொல்லலிங்க.. ஹன்சிகா மோத்வானிதான் சொல்லாமல் சொல்லியுள்ளார்.


மும்பைப் பெண்ணான ஹன்சிகா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய ரவுண்டு வந்தவர். முன்னணி இளம் நாயகர்கள் அனைவரோடும் இணைந்து கலக்கியவர். தமிழ்நாட்டு மருமகளாகப் போகிறார் என்றெல்லாம் கூட கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.




இந்த நிலையில்  சமீப காலமாக தமிழ்ப் படங்களில் ஹன்சிகாவைக் காணவில்லை. கிட்டத்தட்ட ரசிகர்கள் அவரை மறந்து விட்டனர். ஆனால் ஹன்சிகா தமிழ்நாட்டை மறக்கவில்லை. தனது குடும்பத்தோடு மதுரைக்கு வந்தவர் அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பச்சைப் பட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சார்த்தினார்.


கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் முடித்த கையோடு ஒரு ஹோட்டலுக்கும் சென்று குடும்பத்தோடு மதுரை ஸ்டைல் சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு என்று கூறி மகிழ்ந்துள்ளார்..


அதில் இட்லி, தோசை, தேங்காய் சட்னியை ஒரு பிடி பிடிக்கிறார். கடைசியாக பில்டர் காபியையும் ரசித்து சுவைக்கிறார்.. சூப்பரா இருக்கு என்று புன்னகைத்தபடி கூறும் வீடியோவைப் போட்டு மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா.. மீனாட்சியைப் பார்த்தாச்சுல்ல.. இனி எல்லாமே ஹேப்பிதான் ஹன்சிகா!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்