கடைசி 10 நிமிடத்தில் என் மூச்சே நின்றுவிட்டது.. சாய் பல்லவி குறித்து.. ஜோதிகா நெகிழ்ச்சி

Nov 05, 2024,03:44 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை இணைந்து பார்த்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பாராட்டியுள்ளனர். சாய் பல்லவியின் நடிப்பை ஜோதிகா வெகுவாக புகழ்ந்துள்ளது.


சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ல்லலு, ஸ்ரீகுமார், உமைர், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் அமரன். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ்  இசையமைத்துள்ளார். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி  நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் அமரன். 




இப்படம் நான்கு நாட்களில் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அமரன் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அமரன் படத்தை குடும்பமாக பார்த்த சூர்யா மற்றும் ஜோதிகாவும் பாராட்டி தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், அமரன் மிகவும் பிடித்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் ரெபெக்காவின் உண்மையான உலகத்தைக் காண முடிந்தது. படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களின் இதயத்தின் ஒரு பகுதியை இப்படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர் என்று தெரிகிறது என தெரிவித்துள்ளார்.




நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவில், அமரன் திரைப்படத்திற்கும் படக்குழுவிற்கும் சல்யூட். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு அற்புதமான வைரத்தை உருவாக்கியிருக்கிறார். நடிகை சாய் பல்லவி இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எவ்வளவு சவால்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. கடைசி 10 நிமிடத்தில் என் மூச்சே நின்றுவிட்டது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்து ரெபெக்கா வர்கீஸின் பாசிட்டிவிட்டி எங்கள் அனைவரது இதயத்தையும் தொட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் எங்களை சுற்றி இருக்கிறார். உங்களது வீரத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகிறார்கள். உங்களைப் போலவே எங்கள் குழந்தைகளையும் பெருமையாக நாங்கள் வளர்ப்போம் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்