சென்னை: நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு சிறப்புக் குழந்தை இருப்பதால் குழ்நதையின் நலன் கருதி காவல்துறை ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் எழும்பூர் நீதிமன்றம், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் அளித்துள்ளது.
சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கஸ்தூரி பேசுகையில், 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இந்தத் தேடலில் ஹைதராபாத்தில் தங்கியிருந்த கஸ்தூரியை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமு் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமின் அளித்து நீதிபதி தயாளன் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}