மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசினார் நடிகை கஸ்தூரி. ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டு வரப்பட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.
பல்வேறு தெலுங்கு பேசுவோர் சங்கங்கள் அவர் மீது மதுரை, திருச்சி, சென்னை என்று பல்வேறு ஊர்களில் புகார்கள் கொடுத்தன. இ்நத நிலையில் மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடிப்படையில் நடிகை கஸ்தூரியை விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது கஸ்தூரி வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து செய்யப்பட்டுள்ளதால், கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதாக அவரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.
தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரது முன்ஜாமின் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}