6 கட்சி மாறியவராச்சே உங்க தலைவர் செல்வப் பெருந்தகை.. கார்த்தி சிதம்பரத்திற்கு குஷ்பு பதிலடி

Aug 17, 2024,07:56 PM IST

சென்னை:   சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துக்கு நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.


நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் அந்தப் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். பாஜகவில் மீண்டும் தீவிரமாக பணியாற்றப் போகிறேன்.. இனிமேல்தான் இருக்கிறது ஆட்டமே.. எனது பெயரைக் கேட்டாலே திமுகவினர் பயப்படுகின்றனர் என்று குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார்.


ஆனால் குஷ்பு கட்சி மாறப் போகிறார், அதனால்தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை விட்டு விலகியுள்ளார். கட்சியிலும் கூட அவர் தீவிரம் காட்டாமல் இருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று கேட்டிருந்தது.




அதற்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், குஷ்பு ஒரு ஒலிம்பிக் வீராங்கனை. நாலு வருடத்திற்கு ஒருமுறை கட்சி மாறுவார். நாலு வருஷம் காங்கிரஸ், நாலு வருஷம் பாஜக. இப்ப நாலு வருஷம் ஆச்சான்னு தெரியலை என்று பதிலளித்திருந்தார்.


இதுகுறித்து தற்போது குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  அன்பு நண்பரே, பாஜகவில் சேருவதற்கு முன்பு 2 முறை வேறு கட்சியில் இருந்ததாக என்னை கூறியுள்ளீர்கள். எனக்கென்னமோ, நீங்கள் ஆறு முறை கட்சி தாவிய உங்களது தலைவர் செல்வப் பெருந்தகையை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்லியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.


அதேபோல அவர் போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், என்னை ஒலிம்பிக் வீராங்கனை என்று சொன்னதற்கு நன்றி.. இந்த இடத்தை அடைய நான் எத்தனை சிரமங்களை சந்தித்தேன் என்பது உங்களுக்குத்  தெரியப் போவதில்லை. இது ஒரு பெண்ணாக எனது கடின உழைப்பினால் கிடைத்த பலன். எனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல், அரசியல் வாரிசாக இல்லாமல் சாதித்தது இது. என்னைப் போன்று சுயமாக வளர்ந்தவர்களுக்கு சுயமரியாதையும், ஒழுங்கும் மட்டுமே முக்கியம். உங்களுக்கெல்லாம் இது வித்தியாசமான வார்த்தைகளாக இருக்கும் என்பது உறுதி. (பிறகு, ராகுல் காந்தி உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுப் பாருங்க ப்ளீஸ்) என்று கூறியுள்ளார் குஷ்பு.


குஷ்புவின் இந்த எக்ஸ் பதிவுக்கு காங்கிரஸார் பதில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். பாஜகவினரும் குஷ்புவுக்கு ஆதரவாக களமாடுகின்றனர்.. இப்படியாக அரசியல் நிகழ்வுகள் அழகாக போய்க் கொண்டுள்ளன!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்