சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரித்தார். அப்போது தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும் என்று முழங்கினார் அவர்.
நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொகுதியில் இந்த மக்களவை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுக சார்பில் சிட்டிங் எம்பி கலாநிதி வீராசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் பால்கனராஜை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு பெரிய பேப்பரில் தனது பிரச்சாரப் பேச்சை எழுதி வைத்திருந்தார் நமிதா. அதைப் பார்த்தபடி அவர் பேசினார். தமிழிலேயே பேசினார். கொஞ்சும் தமிழில் நமிதா பேசியதாவது:
பாஜக, மீனவர்களுக்காக ரூ.39000 கோடியை கொடுத்துள்ளது. எல்லாருக்கும் நிறைய வீடு கட்டி கொடுத்திருக்காங்க, பாத்ரூம் கட்டி கொடுத்திருக்காங்க. நம்முடைய வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர். உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்தவர். சட்டம் படித்தவர், நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்தவர். உங்க கஷ்டத்தை நன்றாக புரிந்தவர். உங்களுக்காக ஒருவர் உங்களில் ஒருவர்.
பார் கவுன்சில் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர். நீங்கள் தைரியமாக நம்பி பால்கனராஜுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்க. 24 மணி நேரம் பாதுகாப்பாக இருப்பாரு. தாமரை மலரும் தமிழ்நாடும் வளரும். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு யாரு யாரு எல்லாம் வேலை பார்க்கிறார்களோ அங்க எல்லாம் நல்லா இருப்பாங்க என்று கூறி வாக்கு சேகரித்தார் நமிதா.
நமிதா பிரச்சாரத்திற்கு வந்ததால் அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
{{comments.comment}}