மதுரை: நான் நிறைய கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டன. யாரும் என்னை இப்படி கேட்டது இல்லை. அந்த அதிகாரி ரொம்ப ரூடா, அசிங்கமா, ரொம்ப அரகண்டா பேசினாங்க. உங்க மதம் என்ன அதுக்கு சர்டிபிகேட் காமிங்கன்னு கேட்டாங்க என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா கூறியுள்ளார்.
பாஜக உறுப்பினரும், நடிகையுமான நமீதா இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் தன்னிடம் நீங்கள் எந்த மதம் என்றும், அதற்கு ஆதாரம் கேட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த நடிகை நமீதா சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் வித்தியாசமாக நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் நிறைய கோவிலுக்கு சென்று இருக்கின்றேன். யாரும் என்னை இப்படி கேட்டது இல்லை. அப்போது அந்த அதிகாரி ரொம்ப ரூடா, அசிங்கமா, ரொம்ப அரகண்டா பேசினாங்க.
உங்க மதம் என்ன அதுக்கு சர்டிபிகேட் காமிங்கன்னு கேட்டாங்க. இன்னக்கி வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி கேட்து இல்லை. ஏன்னா இந்தியாவில இருக்குற எல்லாருக்கும் தெரியும். பிறப்பால் நான் ஒரு இந்து என்று. என்னுடைய கல்யாணம் கூட திருப்பதியில தான் நடந்தது. என் குழந்தையோட பேரு கூட கிருஷ்ணா, அதித்யா தான். ஒரு பெரிய அதிகாரியாக இருக்கும் அவங்களுக்கு ஒரு பிரபலமானவர்கள் கிட்ட எப்படி பேசனும்னு தெரியல. அது எனக்கு சரியாக தோன்றலை. இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்கனும்னு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
கோவில் நிர்வாகம் மறுப்பு
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றும் நடிகை நமீதாவிடம் விவரங்கள் கேட்ட பின்னர் அவர் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}