சென்னை: நடிகர் விஷால், முடிந்தால், அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். நானும் துடைப்பத்தோட வர்றேன். வாங்க அடிக்கலாம்.. ஆம்பளையா இருந்தா, தைரியம் இருந்தா விஷால் அடிக்கட்டும். அதை விட்டு விட்டு அறிவுகெட்டத்தனமாக பேசக் கூடாது என்று நடிகை ராதிகா சரத்குமார் அதிரடியாக கூறியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் நிலவி வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த சர்ச்சை பெரிதாக வெடித்து பலரது பதவிகளை காவு வாங்கியுள்ளது. பல்வேறு திரையுலகினரின் பெயர்களும் இதில் அடிபடுகின்றன. இதுதொடர்பாக போலீஸாரும் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷாலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுபோன்று விஷமத்தில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும். அதுதாங்க ஒரே வழி என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
பாடகி சின்மயி ஒரு குற்றம் சாட்டினார். நாம அந்தப் பொண்ணை நம்பினோமா. ஏன் இவ்வளவு லேட்டா வந்து சொல்றாங்க, சாட்சி இருக்கா அப்படின்னுதானே கேட்டோம். ஒரு பெண் மனசை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்தப் பெண் பாவம் வாய்ப்பு போய், வேலை போய், திறமையான அவர் கஷ்டப்பட்டார். யார் வந்து ஹெல்ப் பண்ணாங்க.
ஒருத்தன் பேசறான். அவன் பிரஸ்ஸே கிடையாது. உட்கார்ந்த இடத்திலிருந்தே நடிகைகள் பத்தி தப்புத் தப்பா பேசறான். அந்த ஆளை, விஷாலுக்கு தைரியம் இருந்தால் போய் செருப்பால் அடிக்கட்டும். பொதுச் செயலாளர்தானே போய் அடிக்கட்டும். நீ ஆம்பளைன்னா போய் அடி. நானும் துணைக்கு வர்றேன், துடைப்பத்தோட வர்றேன. இது தலைவர் பேசும் பேச்சா.. அறிவுகெட்டத்தனமான பேச்சு.
நீங்க பேமிலி, கூப்பிட்டுப் பேசணும். கமிட்டி போடுங்க. பெரிய நடிகர்கள் வாங்க. அப்பத்தானே தைரியம் வரும். தயாரிப்பாளர்கள் வர வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் வசதிகள் செய்து கொடுப்பதும், பாதுகாப்பு தருவதும் அவர்களோட பொறுப்பு. எல்லா ஆண்களும் அமைதியாயிட்டாங்க. இப்ப பொறுப்பு பெண்கள் மீதுதான் வந்து விழுது. எல்லாப் பெண்களுமே தைரியத்தோட இருக்க மாட்டாங்க. பயப்படுவாங்க. நான்லாம் அடிச்சுருவேன். இல்லை திட்டிருவேன். எல்லாப் பேருக்கும் அந்த தைரியம் வராது.
கமிட்டி போட்டு, அதில் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு லாயர், போலீஸிலிருந்து ஒருத்தவர், இப்படி போடுங்க. இதை உடனே பண்ணுங்க. நாலஞ்சு வருஷம் கழிச்சுப் பண்ணா லேட்டாய்ரும். இப்படியே பேசிட்டுதான் இருக்க வேண்டும். முடிவே கிடையாது. பாதுகாப்பு தர முன்வர வேண்டும். பெரிய நடிகர்கள் முன்வர வேண்டும். பாவம் அந்தப் பெண்கள். வயித்துப் பிழைப்புக்காக வந்து கஷ்டப்படறாங்க என்றார் ராதிகா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}