சென்னை: ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாளினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா காசண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார்.
கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா. இப்படத்தை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர். விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தில் வில்லியாக வந்து பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இளைஞர்களுடன் இணைந்து கடற்கரையினை சுத்தம் செய்து வருகிறார் ரெஜினா. சில தினங்களுக்கு முன்பு அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்டுக் கலக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு கை கோர்த்திருந்தார்.
தனது சமூக பணி தொடர்பான அனுபவம் குறித்து பேசிய ரெஜினா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு படகில் பயணித்தல். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

உண்மையில் இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார். கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.”

ரெஜினா தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் செக்ஷன் 108 படத்திலும் நடித்துள்ளார். நடிகை என்ற கர்வம் இல்லாமல், இவர் கடற்கரைகளை சுத்தம் செய்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு
National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!
அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 23, 2025... இன்று சுற்றி இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும
மார்கழி 08ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 08 வரிகள்
அழகிய பாதமே.. A letter to my feet!
அன்பெனும் பெருமழை!
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
{{comments.comment}}