சென்னை: பிரபல சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் 55 வயதான மஞ்சன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இரவு 55 வயதான மஞ்சன் என்பவர் குடிபோதையில் சாலையில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறியுள்ளது. இதில் மஞ்சன் வேதனையில் அலறி துடி துடித்தார்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்தபோது கார் ஒன்று நிற்காமல் சென்று கொண்டிருந்தது. உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .
இதனை அறிந்த கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் வேகமாக வந்த கார் ஒன்று மஞ்சனை ஏற்றிவிட்டு சென்றது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேசமயம் அந்த காரின் பதிவு எண்ணையும் போலீசார் கண்டறிந்தனர்.
இந்த பதிவு எண்ணின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் . விசாரணையில் அடையார் பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை ரேகாவுக்கு சொந்தமான கார் என்பதும், சீரியல் நடிகை கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை ரேகா கார் ஓட்டுநர் பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}