சென்னை: தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மையே இல்லை... தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு கூடும்... என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
வருடா வருடம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை தனியார் கல்லூரி நடத்திய தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வில் கலந்து கொண்டார் நடிகை சரண்யா. நடிகை சரண்யாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரது இயல்பான நடிப்பு, சாதுர்யமான பேச்சும் அவருக்கொன்று தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இவர் அதிகளவில் அம்மா கேரக்டரில் தான் நடித்துள்ளார். அம்மா கேரக்டர் என்றாலே பெரும்பாலான இயக்குனர்களுக்கு சிக்குபவர் சரண்யா தான். அதிலும் ஆடி போய் ஆவணி வந்தா என்ற வசனத்திற்குப் பெயர் போனவர் இவர்.
இந்த நிலையில் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ளார் சரண்யா. அவர் கூறுகையில், உலகத்தாய் பால்வாரத்தை கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. தாய்மார்கள் அனைவருக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இடையில் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்துள்ளது.
தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தாய்ப்பால் உருவாகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மை இல்லை தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாயின் அழகு கூடும். பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தான்.
தாய்பால் கொடுப்பதினால் மார்பக புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம். குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சிக்கு தேவையான சத்து தாய்ப்பாலில் உள்ளது. தாய்ப்பாலை அனைத்து தாய்மார்களும் குழந்தைகளுக்கு தவறாது கொடுக்க வேண்டும். குழந்தைகளின் நல்ல வளர்ச்சியினை பார்க்கும் போது தாய்மார்களின் மனம் மகிழ்ச்சி அடைந்து தாய்மார்களும் அழகாகிறார்கள் என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!
ஆன்மீகக் குருக்களில் சிறந்தவர்.. அன்பையும் கருணையையும் போதித்த சிந்தனை.. சாய்பாபா!
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!
ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை... நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு!
கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில்.. இன்று மாலை கூடுகிறது.. அனைத்து கட்சி கூட்டம்!
{{comments.comment}}