சென்னை: சென்னை மதுரவாயில் பகுதியில் வசித்து வரும் சோனா வீட்டில் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்ற சிவா மற்றும் லோகேஷ் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்ற நடிகை சோனா ஹைடன் கோலிவுட்டில் குத்தாட்ட பாடல்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது சென்னை மதுரவாயலில் உள்ள கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது மர்ம நபர்களை நாய் பார்த்ததும் குறைக்க ஆரம்பிக்கவே, வெளியில் வந்த சோனா அவர்களை தடுக்க நினைத்து கூச்சலிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் சோனாவை கத்தியை காட்டி மிரட்டி தப்பியோடினர்.
இதனையடுத்து நடிகை சோனா மதுரவாயில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் சோனாவின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதே வேளையில் தப்பித்து ஓடிய மர்ம நபர்களை பிடிக்கவும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சோனா வீட்டில், கத்தியை காட்டி திருட முயன்ற சிவா மற்றும் லோகேஷ் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவா என்பவர் மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், லோகேஷ் அவரது கூட்டாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}