சென்னை: என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத பயத்தை திருடர்கள் காட்டி விட்டார்கள். காவல்துறையினரின் துரித நடவடிக்கை மகிழ்ச்சி தருகிறது. எனக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் நன்று கூறியுள்ளார் நடிகை சோனா.
நடிகை சோனா மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த இரண்டு பேர் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றனர். சோனாவைப் பார்த்து கத்தியைக் காட்டியும் மிரட்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோனா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக சிவா மற்றும் லோகேஷ் என்ற இரு நபர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
துரித கதியில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு தற்போது பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகை சோனா. இதுதொடர்பாக அவர் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கருணையும் ஆதரவும் எப்போதுமே நான் மதிக்கூடியவை. அவை நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவருகின்ற விலை மதிக்க முடியாத பரிசுகளை தரக்கூடியவை. சமீபத்தில் என் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு என்னை அதிர்ச்சியும் கவலையும் அடைய செய்தது. மர்ம நபர்கள் என் வீட்டை உடைத்து வாழ்நாள் பயத்தை உண்டாக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். எல்லாமே திசைமாறியது போல என் வாழ்க்கை மங்கலானது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து என்னை காப்பாற்றி கொண்டேன். இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் என் உணர்வுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் என் மனதில் பெரும் வலியை உண்டாக்கியது.
அதன் பிறகு காவல்துறையில் இருந்து கிடைத்த உதவியும்.. சூழலை புரிந்துகொண்டு உடனடியாக அவர்கள் விசாரணையை துவங்கினார்கள். அந்த மர்ம நபர்களை பிடித்து உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். என்னுடைய பாதுகாப்பின்மையையும், உதவியில்லாத நிலையையும் தெரிந்து கொண்டு நீராவியாக எனக்கு உடனடியாக உதவி செய்தார்கள்.
நான் நினைத்ததை விட குறுகிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையை தீர்த்த மதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய உயர் காவல்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர், மதுரவாயல் காவல் நிலையம் மற்றும் மதுரவாயல் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு துறை ஆகியோருக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாக இதை நான் எடுத்து கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடக சகோதரர்கள் எப்போதுமே எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவு கொடுத்து எனக்கு தூணாக இருந்தார்கள். இது, எதிர்பாராத சூழலில் இருந்த எனக்கு இன்னும் அதிக ஆதரவாக இருந்தது.
இந்த சவாலான சூழலை நான் கடந்து செல்வதற்கு உதவிய மொத்த காவல்துறைக்கும் பத்திரிகை-மீடியா சகோதரர்களுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் மிகுந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சோனா ஹெய்டன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
வலி!
மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
{{comments.comment}}