மும்பை: அதானி குழுமம் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களை ரூ. 60,000 கோடி செலவில் அதி நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த பணிகளை செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்ளளவு 2024ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என்றும் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான கரண் அதானி கூறியுள்ளார்.
இந்த 60,000 கோடி ரூபாய் நிதியில், ரூ. 30,000 கோடியை ஏர் சைட் மேம்பாட்டுக்கும், ரூ. 30,000 கோடியை சிட்டி சைட் மேம்பாட்டுக்கும் செலவிடப் போகிறார்களாம். மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, குவஹாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.

ஏர்சைட் என்பது விமான நிலையத்தின் வருகைப் பகுதி, புறப்பாட்டுப் பகுதி, ரன்வே, கட்டுப்பாட்டு கோபுரங்கள், விமானங்களை நிறுத்தும் ஹங்கர் ஆகியவையாகும். சிட்டி சைட் என்பது விமான நிலையத்திந் கமலர்ஷியல் பகுதியைக் குறிக்கும்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}