குருகிராம்: பிரபல விளையாட்டு ஆடை நிறுவனமான அடிடாஸ், இந்தியாவில் தனது தொழில்நுட்பப் பிரிவில் பணியாளர் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
குருகிராமில் உள்ள அடிடாஸ் தொழில்நுட்ப மையத்தில் சுமார் 700 பேர் பணியாற்றி வரும் நிலையில், 350-க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மென்பொருள் பொறியாளர்கள், டேட்டா சயின்டிஸ்ட்கள் மற்றும் டேட்டா இன்ஜினியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 350 பேர் என்ற எண்ணிக்கையை அடிடாஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
செப்டம்பர் 15-ஆம் தேதி ஊழியர்களுக்கான கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில ஊழியர்களுக்கு அன்றே பணி முடிவுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மற்றொரு பிரிவில் உள்ள ஊழியர்கள் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்குள் நிறுவனத்திற்குள் வேறு பணியிடத்தைத் தேடிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு பணியிடம் கிடைக்காதவர்களுக்கு டிசம்பர் 15 கடைசி பணிநாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனது தொழில்நுட்பப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கம்20 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், முக்கியமான தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்தவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அடிடாஸ் கூறியுள்ளது.
மேலும், இந்தியா தொடர்ந்து முக்கியமான சந்தையாக இருக்கும் என்றும், குருகிராம் மற்றும் சென்னையில் உள்ள தொழில்நுட்ப மையங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பணிகளில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அடிடாஸ் தெரிவித்துள்ளது.
செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு
டிசம்பர் 15ம் தேதியோடு கிளம்பிருங்க.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அடிடாஸ்!
The Power of a Teacher
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
ஸ்கூல் போற குட்டீஸ் சரியா சாப்பிட மாட்டேங்குறாங்களா.. அட இதை செஞ்சு கொடுங்க!
விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!
மழை நின்ற பின்பும் தூறல் போல
{{comments.comment}}