மனுசன் மட்டும் தான் செல்பி எடுப்பானா.. ஆதித்யா எல்1 என்ன பண்ணிருக்கு பாருங்க!

Sep 07, 2023,06:45 PM IST
பெங்களூரு: இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் தான் செல்லும் பாதையிலிருந்தபடி பூமியை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. கூடவே தன்னைத் தானே ஒரு செல்பி எடுத்தும் அசத்தியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்தியா பி.எஸ்.எல்.வி - சி 57 ராக்கெட் உதவியுடன்  கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது தற்போது லேக்ராஞ்ச் 1 பகுதியை நோக்கி பயணித்து வருகிறது. இந்த இடத்தில் நிலை கொண்டிருந்தபடி சூரியனை அது ஆய்வு செய்யவுள்ளது. சூரியனின் வெளிப்புற அடுக்குகள், வெப்பசூழல், வளி மண்டலம் மற்றும் வெப்ப நிலையின் இயக்கவியல் ஒளிவட்டம் கதிர்வீச்சு காந்தபுலம் சூரிய காற்றின் இயக்கம் மற்றும் தன்மை சூர்யனின் எக்ரே கதிர் விண்வெளியில் சூரிய இயக்கவியல் விண்வெளி காலநிலை ஆகியவற்றையும் ஆய்வு செய்யும்.

ஏற்கனவே சந்திரயான்  3 விண்கலமானது சந்திரனைத் தொட்டு விட்டது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகாவும், தென் முனைப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 

இந்த நிலையில் ஆதித்யா எல் விண்கலமானது இரண்டு அட்டகாசமான புகைப்படங்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஒன்று, நமது பூமியை அது எடுத்துள்ள புகைப்படமாகும். பிரமாண்டமாக காட்சி தரும் பூமியின் ஒரு பகுதியை இதில் காண முடிகிறது. பூமிக்கு அருகே சின்னப் புள்ளியாக நிலவு தெரிகிறது.  கூடவே ஒரு செல்பியையும் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்துள்ளது. அதில் ஆதித்யா விண்கலத்தின் ஒரு பகுதி படு பிரகாசமாக தெரிகிறது.

பார்க்கவே ஜோராக உள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா மூலமாக இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பூமியின் சுற்றுப் பாதையில் விடப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு 3 வது முறையாக செப்டம்பர் 10ம் தேதி உயர்த்தப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்