சென்னை: தேமுதிகவுக்கான தொகுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதுதொடர்பான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர்.
எப்படி பாஜக கூட்டணியில் பெரிய கட்சியாக பாமக இடம் பெற்றுள்ளதோ, அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 2வது பெரிய கட்சி தேமுதிக. இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக காலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், பிரேமலதா விஜயகாந்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதி அக்கட்சிக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் சுதீஷ் கடலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் விஜய பிரபாகரன் நிற்கலாம் என்று தெரிகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த உறவு சிறப்பானது, முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். எங்களது கட்சி நிர்வாகிகளும் அதிமுகவுடன் உறவு வைக்கவே விரும்பினர். எனவே அனைவரின் ஒப்புதலோடும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இது தான் இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்லும்.
2011 வரலாறு மீண்டும் திரும்பும். இந்தக் கூட்டணி தொடரும் இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல், வருகிற உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்
சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?
அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!
என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!
இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!
{{comments.comment}}