அதிமுகவின் வேற லெவல் ஸ்பீட்.. நேர்காணலுக்கு தேதி குறிச்சாச்சு.. நோட் பண்ணுங்க "உடன் பிறப்புகளே"!

Mar 07, 2024,07:44 PM IST

சென்னை: திமுக தரப்பில் இன்று விருப்ப மனுக்களை வாங்கி முடித்துள்ள நிலையில் மறுபக்கம் அதிமுக வேட்பாளர் நேர்காணலுக்கே தேதி குறித்து அதிரடி காட்டியுள்ளது.


அதிமுகவில் விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான நேர்காணலுக்கான தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு நாடுகள் இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது. 


புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளவர்களுக்கு இந்த தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்:




மார்ச் 10 - ஞாயிற்றுக்கிழமை (காலை 9.30 மணிக்கு)


1. திருவள்ளூர் (தனி)

2. சென்னை வடக்கு

3. சென்னை தெற்கு 

4. மத்திய சென்னை

5. ஸ்ரீபெரும்புதூர்

6. காஞ்சிபுரம் (தனி)

7. அரக்கோணம்

8. வேலூர்

9. கிருஷ்ணகிரி 

10. தருமபுரி.


பிற்பகல் 2 மணிக்கு


1. திருவண்ணாமலை

2. ஆரணி

3. விழுப்புரம் (தனி)

4. கள்ளக்குறிச்சி

5. சேலம்

6. நாமக்கல்

7. ஈரோடு

8. திருப்பூர்

9. நீலகிரி (தனி)

10. கோயம்புத்தூர்


மார்ச் 11, திங்கள்கிழமை - காலை 9.30 மணிக்கு


1. பொள்ளாச்சி

2. திண்டுக்கல்

3. கரூர்

4. திருச்சிராப்பள்ளி

5. பெரம்பலூர்

6. கடலூர்

7. சிதம்பரம் (தனி)

8. மயிலாடுதுறை

9. நாகப்பட்டனம் (தனி)

10. தஞ்சாவூர்


பிற்பகல் 2 மணிக்கு


1. சிவகங்கை

2. மதுரை

3. தேனி

4. விருதுநகர்

5. ராமநாதபுரம்

6. தூத்துக்குடி

7. தென்காசி (தனி)

8. திருநெல்வேலி

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி.


இந்த நேர்காணலுக்கு வருவோர், விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் குறிப்பிட்ட நாளில் வருகை தர வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்