சென்னை : அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து விட்டு சென்றார். ஆனால் அந்த இரண்டு நாட்களும் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்கவில்லை. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் சென்று அமித்ஷா உடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை டில்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்று காலை அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் அது கிடையாதாம். நேற்று தமிழக கவர்னரை அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு அளித்ததாக சொல்லப்பட்டது.கவர்னரிடம் அதிமுக அளித்த ஊழல் பட்டியல் விபரம் இதோ...
துறை வாரியாக ஊழல் விபரம் :

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - 64,000 கோடி
ஊரக வளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ் துறை - 60,000 கோடி
சுரங்கம் மற்றும் கனிம வளத் துறை - 60,000 கோடி
எரிசக்தித் துறை - 55,000 கோடி
கலால் வரி (டாஸ்மாக்) - 50,000 கோடி
பத்திரப்பதிவுத் துறை - 20,000 கோடி
நெடுஞ்சாலைத்துறை - 20,000 கோடி
நீர் ஆதாரத் துறை - 17,000 கோடி
சென்னை மாநகராட்சி - 10,000 கோடி
தொழிற் துறை - 8000 கோடி
பள்ளிக் கல்வித்துறை - 5000 கோடி
மக்கள் நல்வாழ்வுத் துறை - 5000 கோடி
வேளாண்மைத் துறை - 5000 கோடி
சமூக நலத்துறை - 4000 கோடி
உயர் கல்வித்துறை - 1,500 கோடி
இந்து சமய அறநிலையத்துறை - 1,000 கோடி
ஆதி திராவிடர் நலன் துறை - 1,000 கோடி
சுற்றுச் சுழல் மற்றம் வனத்துறை - 750 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - 500 கோடி
சிறைத் துறை - 500 கோடி
சுற்றுலாத் துறை - 250 கோடி
பால் வளத்துறை - 250 கோடி
திமுக அரசின் துறை வாரியாக நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு, அதற்கான ஆதாரங்களை நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அளித்தது போல், இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அளிக்க போகிறாராம். அதோடு, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்த போகிறாராம். இதற்காக தான் இந்த டில்லி பயணம் என சொல்லப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!
ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Extra-curricular activities.. மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிப்போம்!
பெருகும் முதியோர் இல்லங்கள்.. வருத்தம்தான்.. ஆனாலும் ஒரு பாசிட்டிவ் பாயின்ட் இருக்கே!
இந்தியாவின் தாஜ்மஹால்.. காலத்தைத் தாண்டி நிற்கும்.. கம்பீர காதல் சின்னம்!
"இந்தாங்க டீச்சர் பூ".. சிறுகதை
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
{{comments.comment}}