பெண் குழந்தைகளைப் போற்றிக் கொண்டாடுவோம்.. இன்று என்ன நாள் தெரியுமா?

Feb 24, 2026,03:35 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)


பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பாலை கொடுக்கும் பழக்கம் இன்று மலை ஏறிவிட்டது . இப்படி சிறப்பு வாய்ந்த பெண் குழந்தைகளை போற்றி கொண்டாடுவோம் .


என்ன தினமாக கொண்டாடலாம் ? என்று சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்களா?


மாநில பெண் குழந்தைகள் தினம் (பிப்ரவரி 24) 




மாநில பெண் குழந்தைகள் தினம் என்பது பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக இந்நாளை விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடி, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.


பெண் குழந்தைகள் சமூகத்தின் எதிர்கால தாய்மார்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் என பல்வேறு பொறுப்புகளை ஏற்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பல இடங்களில் அவர்கள் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு, சம உரிமை ஆகியவற்றில் பின்தங்கி காணப்படுகிறார்கள்.


பெண் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தை உணர்த்தி கல்வியில் சிறந்த பெண்களாக விளங்கசெய்ய வேண்டும் .


குழந்தை திருமணத்தைத் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு பிடித்த கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்க வேண்டும்.


சமத்துவமான சமூகத்தை உருவாக்க பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் முயற்சிகளை செய்ய வேண்டும்.


இந்தியாவில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு Ministry of Women and Child Development மூலம் பெண் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

அதேபோல் Beti Bachao Beti Padhao (பெண் குழந்தையை காப்போம், கல்வி அளிப்போம்) என்ற திட்டம் 2015 ஆம் ஆண்டு Narendra Modi அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இத்திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. மேலும், பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக போராடிய சாவித்ரி பாய் பூலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.


பெண் குழந்தை பிரச்சினைகளை சமாளிக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.


தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, மகளிர் சுயஉதவி குழுக்கள், இலவச கல்வி திட்டங்கள் போன்றவை பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.


“ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் கல்வி கற்கும்” என்ற பழமொழியின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. பெண் குழந்தைகள் குடும்பத்தின் ஊன்று கோல், சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடையாளமாக உள்ளார்கள்.


பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது : ஒவ்வொரு பெற்றோர்களும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பாகுபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் . பெண் குழந்தைகளிடம் காட்டும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும் என்று காரணத்தை காட்டி அவர்களின் மேல்படிப்புகள் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளை பறிக்கக் கூடாது.

 

ஆண் குழந்தை தான் பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தனது இறுதி காலத்தில் மகள் அல்லது மகன் வீட்டில் தங்குவதற்கு சம உரிமை இருக்கிறது என்பதை கூற வேண்டும் . பெண் குழந்தைகள் தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு செயலையும் ஒதுக்கி கொடுக்க வேண்டாம்


பெண் குழந்தைகள் எதையும் துணிச்சலாக செய்ய கற்றுக் கொடுக்க  வேண்டும். பெண் குழந்தைகளை சுயமாக முடிவெடுக்கும் உரிமை அளிக்க வேண்டும் . ஆண் ,பெண் பாகுபாடில்லாமல் நல்ல நட்பாக பழக சொல்லி தர வேண்டும்.


பெண் குழந்தைகள் குடும்பத்தின் விளக்கு என்பதை உணர்ந்து அவர்களுக்கு மதிப்பளிப்போம். பெண் குழந்தைகள்

சாதிக்க பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து இன்றைய நாளை கொண்டாடுவோம் . 


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்