சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை, குறைப்பு, மகளிர்க்கு மாதந்தோறும் 3000 வழங்க, உள்ளிட்ட 133 அம்சங்கள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 30ஆம் தேதி மார்ச் வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார்.
இதில் 133 அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், கைத்தறி சங்கங்கள், மீனவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டார்கள், சிறு குறு தொழிலாளர்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், பொதுநல சங்கங்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், உள்ளிட்ட அனைத்து மக்களும் கொடுக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தமிழக மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களையும், அந்தப் பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வகையிலும் தயார் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் முன்பு வெளியிடுகிறேன்.
-- மகளிர் உரிமைத் தொகையாக மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 3000 வழங்க வேண்டும்.
- ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும்.
-நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும்.
-வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
-உயர் நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
-குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள், ஈழத் தமிழர்கள் உட்படுத்த வேண்டும்.
-கல் குவாரிகளை பாதுகாக்க வேண்டும்.
-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்துதல்.
-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 450 வழங்க வேண்டும்.
-பழங்குடியின பகுதிகளுக்கு சாலை அமைத்தல்
-பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும்
-விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 5000 வழங்க வேண்டும்.
-மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
-நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
அதிமுக சார்பில் வெளியிட்ட 133 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என கூறினார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}