திருச்சி: கருணாநிதி குடும்பத்தில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறக்கவில்லை என்றால் ஒரு கவுன்சிலராகக்கூட ஆகியிருக்க முடியாது. எனக்கு திறமையில்லை என்று சொல்கிறார். திறமையைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்று முதல்வர் முக ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதுகுறித்து பதிலளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் என்னை பற்றி விமர்சனம் செய்துள்ளார். நான் ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளிவிவரத்துடன் துண்டு சீட்டு இல்லாமல் என்னால் பேச முடியும். கடந்த 3 ஆண்டு ஆட்சியில் அவர் நிறைவேற்றிய திட்டங்களை பற்றி முதல்வர் பேச தயாரா?
அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக தான் ரத்து செய்துவிட்டார். அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் ரத்து செய்துவிட்டார். மக்களை ஏமாற்றி கொள்ளைப்புறம் வழியாக ஆட்சிக்கு திமுக வந்துவிட்டது. 2021ம் ஆண்டு தேர்தலில் அறிக்கையில் வெளியிட்ட திட்டங்களில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றவில்லை.
நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக உயர்ந்தவன் என்பது தான் பெருமை. உங்களுடைய தந்தையின் அடையாளத்தை வைத்து பதவிக்கு வருவது எல்லாம் திறமையல்ல. கருணாநிதி குடும்பத்தில் மட்டும் ஸ்டாலின் பிறக்கவில்லை என்றால் ஒரு கவுன்சிலராகக்கூட ஆகியிருக்க முடியாது.
எனக்கு திறமையில்லை என்று சொல்கிறார். திறமையைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை. உங்கள் அப்பா காட்டிய அடையாளத்தின் படி தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்,கட்சிக்கு தலைவராகவும் ஆகியிருக்கிறீர்கள். இன்றைக்கு உதயநிதிக்கு எந்த தகுதியின் அடிப்படையில் பதவி கொடுத்துள்ளீர்கள். மிசா சட்டத்தில் சிறை சொன்றாரா? அல்லது, திமுக போராட்டத்தில் எத்தனை முறை கலந்து கொண்டு சிறை சென்றவர். ஒன்றுமே கிடையாது.
கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற ஒரே ஒரு அடையாளத்தை வைத்து தான் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியிருக்கீங்க, அமைச்சராக்கி இருக்கீங்க , துணை முதல்வராக்கி இருக்கீங்க. ஏன் அந்த கட்சியில் வேறு யாருமே உழைத்தவர்கள் இல்லையா?. மிசா சட்டத்தில் சிறை சென்றவர்கள் இல்லையா?. அப்படிப்பட்டர்கள் எல்லாம் இருந்தும் ஓரம் கட்டப்பட்ட கட்சி தான் திமுக கட்சி.
அண்ணா திமுக கட்சி ஒன்று தான் ஜனநாயக கட்சி. ஒரு சாதாரண தொண்டன் கூட உச்சபச்ச பதவிக்கு வர முடியும். முதலமைச்சர் ஆகலாம். பொதுச்செயலாளர் ஆகலாம். வேறு எந்த கட்சியிலும் ஆகமுடியாது. அதிலும், குறிப்பாக திமுக கட்சியில் வர முடியாது. திமுக கட்சியில் கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகளுக்கு தான் அந்த வாய்ப்பு என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}