சென்னை: காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், சென்னை வேளச்சேரியில் நேற்று ,
மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது. இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே? தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்?
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}