டெல்லி: மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையேயான இந்த மோதல், ஏதோ இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான சாதாரணமான மோதல் அல்ல. நீண்டகாலமாகத் தொடரும் ஒரு சிக்கலான புவிசார் அரசியல் விவகாரமாகும்.
இந்த மோதல் இப்போதைக்கு முடியக் கூடியதும் அல்ல.. ஏதாவது ஒரு நாடு மோசமான தோல்வியைத் தழுவி அடியோடு நாசமானால்தான் இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.. என்னடா இப்படி சொல்றீங்க என்று நினைக்கலாம். நிதர்சனம் அதுதான்.
இதில் ஒரு தரப்பை மட்டும் குற்றஞ்சாட்டுவதையோ அல்லது ஒற்றைப் பரிமாணத்தில் பார்ப்பதையோ விட, இதற்குக் பின்னால் உள்ள முக்கிய காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஈரான் இஸ்ரேல் மோதல் என்பது நீண்ட கால மோதல்.. இஸ்ரேலை தற்போதைய ஈரான் அங்கீகரிக்கவில்லை. அதை அழிப்பதை முக்கிய நோக்கமாக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஈரான் மிகப் பெரிய மிரட்டல். தனக்கு பெரும் ஆபத்தாக இருந்து வந்த பாலஸ்தீனம், எகிப்து, சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளை இஸ்ரேல் ராணுவ ரீதியாக முடக்கிப் போட்டு விட்டது - அமெரிக்காவின் துணையுடன். ஈராக்கும் கூட வீழ்ந்து விட்டது. இஸ்ரேலால் அடக்க முடியாத ஒரே நாடாக ஈரான் மட்டுமே இருக்கிறது. ஈரான் இருக்கும் வரை இஸ்ரேலுக்கு ஆபத்துதான்.
வாய்ப்பு கிடைக்கும்போது ஈரானை மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம். இஸ்ரேலுக்கு உலக நாடுகளிலேயே முழுமையாக ஆதரவு தரும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. இஸ்ரேல் என்ன செய்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி. இஸ்ரேல் 10 விஷயத்தை கேட்டால், நூறாக கொடுத்து கொஞ்சும் நாடு அமெரிக்கா. அந்த அளவுக்கு அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக உள்ளது இஸ்ரேல். இஸ்ரேலுக்கு ஆபத்து என்றால் அது தனக்கான ஆபத்து என்றே அமெரிக்கா எடுத்துக் கொள்ளும். இதனால்தான் ஈரானை அமெரிக்காவும் தனது வைரியாக பாவித்து வருகிறது.
ஈரானை முடக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கையில் எடுத்த ஆயும்தான் - ஈரானின் அணு சக்தித் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றன. ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் செயல்பாடுகள், பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச அணு சக்தி முகமை இதுவரை நடத்திய ஆய்வுகளிலிருந்து அங்கு அணு ஆயுதம் இருப்பதாக தெரியவில்லை என்றே தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. ஆனால் ஈரானிடம் 60 சதவீத அளவுக்கே இருப்பதாக சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் இதை நம்புவதில்லை, ஏற்பதும் இல்லை. மறுபக்கம் ஈரானைப் பொறுத்தவரை இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளுக்கு பெரும் மிரட்டலாக இருப்பதாக கூறுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பல்வேறு முஸ்லீம் நாடுகளின முந்தையப் போர்கள், மோதல்களில் ஈரானின் பங்கும் உள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கில் ஈரான் தனது செல்வாக்கை விரிவாக்குவதற்காக ஹிஸ்புல்லா (லெபனான்), ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (ஏமன்) மற்றும் காசாவில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த 'ப்ராக்ஸி' சக்திகள் இஸ்ரேல் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை அடிக்கடி தாக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகள் தனது நாட்டு இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கில் தனது மூலோபாய நலன்களையும் தனது நட்பு நாடுகளையும் பாதுகாப்பதே முக்கிய இலக்காக உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத்தை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ளவே எப்போதும் அமெரிக்கா விரும்பும். உலக நாடுகளை கட்டுப்படுத்துவது என்பது அதற்கு லட்டு சாப்பிடுவது போல. இஸ்ரேலுக்கு தனது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதே முக்கியமானது. இந்த இரண்டு நாடுகளும் சேரும்போது பிறகு எப்படி அங்கு இருக்கும்.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக் கடற்பாதையான ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கில் இருப்பதால், அந்தப் பாதையைத் திறந்த நிலையில் வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது. ஆனால் அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் மோதல் வெடிக்கும்போதெல்லாம் இதை மூடி விடும் ஈரான். இதனால் உலக அளவில் பெரும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
இந்த மோதல் வெறும் ஈரான் vs இஸ்ரேல்/அமெரிக்கா என்ற அளவில் நின்றுவிடவில்லை. மத்திய கிழக்கு நாடுகளும் இதில் சிக்கியுள்ளன.
பல வளைகுடா நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்காவுடன் ராணுவ ரீதியாகவும், அதே சமயம் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக ஈரானுடன் ராஜதந்திர ரீதியாகவும் சமநிலையைப் பேண முயல்கின்றன. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழல், இந்த சமநிலையைப் பராமரிப்பதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
தாக்குதல்களும், பதிலடி தாக்குதல்களும் தொடர்வதால், இப்பகுதியில் அமைதி திரும்புவது சவாலாக உள்ளது. இது பிராந்தியத்தில் உள்ள சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் வர்த்தகத்தையும் பாதிக்கிறது.
இந்த மோதல் என்பது அதிகாரப் போட்டி, பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் ஆதிக்கப் போர் ஆகிய மூன்றின் கலவையாகும். எந்தவொரு தரப்பும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லாதது, தற்போதைய பதற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மத்திய கிழக்கு மோதலைப் பொறுத்தவரை ஒன்று இஸ்ரேல் அழிய வேண்டும்.. இல்லாவிட்டால் ஈரான் அழிய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்கும் வரை இந்தப் போர்களும், மோதல்களும், பூசல்களும் நீடித்துக் கொண்டேதான் இருக்கும். காரணம் இந்தப் போரில் ஈடுபட்டு வரும் நாடுகளின் நோக்கம் இதுதான். ஆனால் இது நடைபெறுவது பிராக்டிகலாக மிக மிக கடினம். அமரிக்கா முழு அளவில் இன்னும் தாக்கவில்லை, இஸ்ரேலும் சாமானிய நாடு கிடையாது. அதேசமயம், ஈரானையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இந்த போர் விரைவில் முடிந்தால் எல்லோருக்கும் நல்லது. மாறாக பரவினால், நீடித்தால், வீரியம் பெற்றால் உலகத்துக்கே ஆபத்து.
நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்.. Instant புளியோதரை மசாலா பொடி!
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சிவலிங்கப்பூவும், கங்கை நதியும்!
சிறகுகள் இல்லாவிட்டாலும்.. சிந்தனை வானில் தடை இல்லை!
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
மங்கையர் தினமெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இதைப் பற்றி யோசிக்கலாம் வாங்க!
{{comments.comment}}