சென்னை: என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி வருகிற 23ம் தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். அதற்கான இலச்சினை மற்றும் பாடலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளேன். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் என்னுடைய சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. நான் எப்பொழுதும் மக்களுடன் தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப் பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்.

மக்களோடு எப்போதும் பேசிக் கொண்டிருப்பவன் நான். மக்களுக்காக எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கினார். திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம். தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தை 7ம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் தொடங்க உள்ளேன்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்லுகிற காட்சிகள் எல்லாம் எங்களோடு அணிசேர வேண்டும். வீடு வீடாக போய் கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனது இந்த சுற்றுப்பயணம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை என்னென்ன நிறைவேற்றப்பட்டது. என்னென்ன நிறைவேற்றப்படவில்லை என்பதை குறித்து எல்லாம் இந்த சுற்று பயணத்தின் போது மக்களிடம் எடுத்துரைக்க உள்ளேன்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அதிமுக தலைமையில் தான் கூட்டணி நான் தான் முதல் அமைச்சர் வேட்பாளர். உடம்புக்கும் உயிர் முக்கியம் என்பது போல வெற்றிக்கு தேர்தல் வாக்குறுதி ரொம்ப முக்கியம் இப்போதே அறிவித்துவிட்டார் தீர்ந்து போய்விடும் தேர்தல் நேரத்தில் அற்புதமாய் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}