கோயம்புத்தூர்: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து அப்புறம் பேசறேன் தலைவா என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உண்டான பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது அதிமுக. இந்தக் கூட்டணி உருவானது முதலே அதிமுக தொண்டர்கள் அசவுகரியமாகவே உணர்ந்த வந்தனர். இருப்பினும் அதிமுக தலைமையின் முடிவை எதிர்த்துப் பேச முடியாத நிலையே காணப்பட்டதால், தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது அதிமுக.

பாஜக மீதான அதிருப்தி, கோபம் எல்லாம் அதிமுக மீதும் திரும்பியதே இதற்குக் காரணம் என்று தொண்டர்கள் குமுறினர். தலைவர்கள் பலரும் கூட பாஜக மீது அதிருப்தியுடனேயே இருந்தனர். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக தரப்பு அடுத்தடுத்து கடும் அதிருப்தி அடைந்தது. இந்த அதிருப்தி உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது அதிமுக.
இந்த முடிவு குறித்து நடை பயணத்தில் இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நடைபயணத்தில் இருக்கிறேன் தலைவா. அரசியல் பேச மாட்டேன். அதிமுக அறிக்கை படித்தேன். கட்சி தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும்.. .அப்புறம் பேசறேன் தலைவா.. என்று கூறி முடித்துக் கொண்டார் அண்ணாமலை.

அதேசமயம், அதிமுகவின் இந்த முடிவால் பாஜகவுக்கு எந்த பாதகமும் கிடையாது என்று பல்வேறு பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி முறிவதற்கு நாங்கள் காரணம் கிடையாது, சில அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சுதான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}