சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஏற்கனவே 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் வெளியீடு :
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது பலத்தை நிரூபிக்க வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு :

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதன்படி, மீதமுள்ள 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது உறுதியாகி உள்ளது. இதில் ஏற்கனவே தனது சொந்த தொகுதியான எடப்பாடி உள்ளிட்ட 23 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் அடங்கிய 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுவரை 150 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமக தலைமை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
{{comments.comment}}