சென்னை : பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கும் அதிகாரத்தை தேர்தல் கமிஷன் அன்புமணிக்கே கொடுத்திருப்பதாகவும், பாமக அன்புமணி தலைமையிலேயே இருப்பதாகவும் அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
பாமக.,வில் நடக்கும் குழப்பங்கள் இன்னும் முடிவு இல்லாமல் போய் கொண்டே இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த பொதுக்குழுவிற்கு எதிராக அன்புமணியும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பொதுக்குழுவை அறிவித்தார். கோர்ட் வரை சென்ற இந்த விவகாரத்தில் கடைசியாக அன்புமணி பொதுக்குழு நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுகு்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டு, அதற்கு பதிலளிக்க அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த 10 நாட்களுக்குள் அவர் பதிலளிக்காத நிலையில் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இருந்தும் அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும், பதிலும் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்து நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். மேலும் அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என்று மீண்டும் தெரிவித்த ராமதாஸ், அன்புமணி தனிக்கட்சி துவக்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஒற்றை மனிதனாக தான் உருவாக்கிய கட்சி என்பதால் தனக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக ராமதாஸ் கூறி இருந்தார். முன்னதாக, கட்சி மற்றும் கட்சியின் சின்னம் மீது உரிமை கோரி அன்புமணி தரப்பில் வழக்கு தொடர்ந்தால் தன்னை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்து விட்டதால் பாமக.,வில் நிலவி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்தால், அதற்கு பிறகு வன்னியர் சங்கத்திற்கு பூட்டு, அன்புமணி-ராமதாஸ் தரப்பு மோதல் என தொடர்ந்து பிரச்சனைகள் வளர்ந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, பாமக அன்புமணி தலைமயிலேயே உள்ளது. மாம்பழ சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கும் அதிகாரத்தை தேர்தல் கமிஷன் அன்புமணிக்கே வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் பாமக விவகாரம் முடிந்து விட்டதாகவும் வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
ஆனால் பாமக.,விற்குள் இன்னும் குழப்பம் அதிகரித்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் சின்னம் யாருக்கு என்ற விவகாரம் தற்போது தலைதூக்கி உள்ளதால், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி, நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தரப்பு தேர்தல் கமிஷனிடம் முறையிட வாய்ப்புள்ளது. அதே போல் கோர்ட்டிலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் அன்புமணி, ராமதாஸ் இரு தரப்பையும் அழைத்த பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்வு காண கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முயற்சிக்கும். அதற்கு இருவரில் யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, மாம்பழ சின்னத்தை முடக்கி வைக்கும் முடிவை தேர்தல் கமிஷனும், கோர்ட்டும் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தை அனுபவம் மிக்க அரசியல் தலைவரான ராமதாஸ் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. ரெடியா.. மார்ச் 26ல் தொடங்குகிறது.. ஐபிஎல் 2026!
The See-Saw of the Mind.. இன்றைய ஆங்கிலக் கவிதை!
டெல்லி பனிமூட்டத்தால் விபரீதம்.. அடுத்தடுத்து மோதிக் கொண்டு தீப்பிடித்த வாகனங்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 16, 2025... இன்று நினைத்த காரியங்கள் கைகூடும்
மார்கழி 1.. மாணிக்கவாசகரின் திருவெம்பாவை.. ஆதியும் அந்தமும் இல்லா!
மார்கழி 1.. கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை.. பாசுரம் 1.. மார்கழித் திங்கள்!
{{comments.comment}}