ஏரோ இந்தியா 2023.. பெங்களூரில் தொடங்கி வைத்தார் மோடி.. இந்தியாவின் வலிமை என புகழாரம்!

Feb 13, 2023,01:03 PM IST
பெங்களூரு:  ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தார். "புதிய இந்தியா" 21வது நூற்றாண்டின் எந்த வாய்ப்பையும் தவற விடக் கூடாது என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.



பெங்களூர் எலகங்கா விமான தளத்தில் ஆண்டு தோறும் ஏரோ இந்தியா எனப்படும் விமானக் கண்காட்சி நடைபெறும். பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் இதில் காட்சியில் பங்கேற்கும். இந்திய போர் விமானங்களின் வலிமையும் இதில் வெளிப்படும்.

இந்த ஆண்டுக்கான ஏரோ இந்தியா ஷோவை இன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 14வது ஏரோ இந்தியா ஷோவில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் முக்கிய அம்சமாக திகழும்.  வழக்கம் போல இந்த கண்காட்சியிலும் இந்தியாவின் சார்பில் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படும். பல்வேறு விமான நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சியும் இதில் இடம் பெறும்.

ஏரோஇந்தியா ஷோவில் 98 நாடுகளைச் சேர்ந்த 809 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த ஆண்டு ஷோவுக்கான கருப்பொருள் "கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ரன்வே" என்பதாகும். இந்தக் கண்காட்சியை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கிடையே ரூ. 75,000 கோடி மதிப்பிலான 251 ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்படவுள்ளன.  போயிங் உள்ளிட்ட பன்னாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் கண்காட்சியில் முக்கியமாக பங்கேற்கவுள்ளன.  அமெரிக்காவிலிருந்து மிகப் பெரிய குழுவினரும் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.  அமெரிக்காவின் பல்வேறு அதி நவீன போர் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

ஏரோ இந்தியா கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஏரோ இந்தியா கண்காட்சி, இந்தியாவின் புதிய பலத்தையும், அதன் அபிலாஷைகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியா முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கூடிய தேஜாஸ் விமானத்தை உருவாக்கியது. இந்தியாவின் மேக் இன் இந்தியா நோக்கத்தை இது பூர்த்தி செய்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் திறமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

பாதுகாப்புத் தளவாடப் பிரிவில் மிகப் பெரிய முதலீடுகளுக்கும், தயாரிப்புக்கும் இந்தியா மிகவும் உகந்த  இடம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். உலகின் முன்னணி ராணுவத் தளவாட தயாரிப்பாளராக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றார் பிரதமர் மோடி.  5 நாட்கள் ஏரோஇந்தியா கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்