ஹரியானாவில் பரவும் கலவரம்.. போலீஸ் தடை உத்தரவு அமல்.. பலத்த பாதுகாப்பு!

Aug 01, 2023,11:48 AM IST
குருகிராம் : மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை, கலவரம் சம்பவங்கள் நடந்து நாட்டையே உலுக்கி வரும் நிலையில், தற்போது அரியானா மாநிலத்திலும் வன்முறை, கலவரம் வெடித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

அரியானாவின் நுஹ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மத ஊர்வலத்தை தடுக்க முயன்ற போலீஸ் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கலவரம் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் பல இடங்களிலும் இரு மதத்தினரிடையே மோதல் வெடித்து வருகிறது.

அரியானாவில் இது வரை நடந்த மத கலவரம், மோதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பேலீசாரின் வாகனங்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அரியானா முழுவதும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மத வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதிகமானவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 20 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்