சரத்பாபு நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. குடும்பத்தினர் வேண்டுகோள்!

May 03, 2023,09:08 PM IST

ஹைதராபாத்: நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர் குணமடைந்து வருவதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்,உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அவர் குறித்த செய்திகள் காட்டுத் தீயாக பரவின. அவர் காலமாகி விட்டதாக அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன.




இந்த நிலையில் இந்த செய்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.  இதுகுறித்து சரத்குமாரின் சகோதரி கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரத்குமார் நலமுடன் உள்ளார். அவர் வேறு அறைக்குத்தான் மாற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து செய்தியாளர்கள் முன்பு தோன்றுவார். அவர் குறித்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியதாக செய்திகள் கூறுகின்றன.


முன்னதாக சென்னையிலும் பின்னர் பெங்களூரிலுமாக சரத்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவர் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்த நிலைக்குப் போனதால் கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறார்சரத்பாபு.


சேருசத்யம் பாபு தீக்ஷிதலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் பாபுவுக்கு வயது 71 ஆகும். தெலுங்குத் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சரத் பாபு தமிழிலும் மிகப் பெரியஅளவில் நடித்து மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரையுலக நண்பராக வலம் வந்த அவர் நிஜத்திலும் அவர்களுக்கு நல்ல நண்பராக திகழ்ந்தவர்.


1973ம் ஆண்டு ராமராஜ்ஜியம் என்ற தெலுங்குப் படத்தில் நடித்து அறிமுகமானார் சரத் பாபு. 220க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.  3 முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றுள்ளார்.


சலங்கை ஒலி, வேலைக்காரன், முத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் சரத்பாபு நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்