சீமான் சவால்.. வினோஜ் செல்வம் விட்ட பதில் சவால்.. ஓடி வந்து பதிலடி கொடுத்த இடும்பாவனம் கார்த்திக்

May 25, 2024,04:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்று போட்டியிட்டு எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுக் காட்டி விட்டால் நாம் தமிழர் கட்சியையே கலைத்து விடுகிறேன் என்று சீமான் விடுத்திருக்கும் சவாலைத் தொடர்ந்து பாஜக - நாம் தமிழர் கட்சியினர் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது.


தமிழ்நாட்டில் பாஜகதான் மூன்றாவது பெரிய கட்சி என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என்று நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனிச்சு நில்லுங்க, சிங்கமா நிக்கணும், கூட்டணி சேர்க்கக் கூடாது. அப்படிப் போட்டியிட்டு எங்களை விட அதிக வாக்குகள் வாங்கிக் காட்டட்டும்.. நான் என் கட்சியையே கலைச்சுர்றேன்.. பிறகு தெரியும் யார் பெரிய கட்சின்னு என்று சவால் விடுத்திருந்தார். தொடையைத் தட்டி அவர் விட்ட இந்த அதிரடி சவால் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.


கட்சியை கலைச்சுராதீங்க.. காமெடி போய் விடும்




சீமானின் இந்த சவாலுக்கு மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்.


நாம் தமிழர் கட்சி  டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள். 

ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.


இதற்கு நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவு:


அள்ளி அளந்து விட்ட அண்ணாமலை - இடும்பாவனம் கார்த்திக்


யார் எதைப் பேசுவது எனும் விவஸ்தை இல்லையா சகோதரரே?


"நான் மனிதப்பிறவியே இல்லை; பயோலாஜிக்கலாகப் பிறக்கவில்லை" எனக் கூறிப் பெற்ற தாயையே கொச்சைப்படுத்தும் நரேந்திரமோடியைத் தலைமையேற்றுக் கொண்டு கதைகளைப் பற்றியும், பொய்களையும் பற்றியும் பேசலாமா?


தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றிபெறப் போவதில்லை என்பது அண்ணாமலையே அறிந்த உண்மை. கோவையில் மண்ணைக் கவ்வப்போவதை முன்கூட்டியே அறிந்துதான், 'கிணத்தைக் காணோம்' என வடிவேலு சொன்னக் கதை போல, ஒரு இலட்சம் வாக்காளர்களைக் காணவில்லை என அள்ளி அளந்துவிட்டார் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. தோல்வியை முன்கூட்டியே அறிந்து, ரெடிமேட் காரணத்தைத் தயார் செய்ததோடு நிற்காது, கோவையில் மட்டும் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்கக்கோரி ஆள் வைத்து நீதிமன்றத்தில் மனு போட்டார். தன்னைவிட அதிக வாக்குகள் வாங்கிவிடுவோரோ? எனும் பயத்தில் நயினாரைப் போட்டுக் கொடுத்தார்.


இப்போது ஒரு இடம்கூட தேறாது என அறிந்து, அடக்கி வாசிக்கிறார். பாஜகவைவிட நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்றுவிட்டால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என அண்ணன் சீமான் அவர்கள் சவால் விடுத்திருக்கிறார்.


வெற்றிபெறுவோம் என நீங்கள் பேசுவது உண்மையென்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லையென்றால், மாநிலத்தலைவர் பொறுப்பைவிட்டு விலகுகிறேன் என உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பேசச் சொல்லுங்கள்.. பார்ப்போம்..


அதைச் சொல்லத் துணிவு இருக்கா? திராணி இருக்கா? என்று கேட்டுள்ளார் இடும்பாவனம் கார்த்திக்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்