டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

Aug 08, 2025,11:04 AM IST

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளதால், வால்மார்ட், அமேசான், டார்கெட் மற்றும் கேப் போன்ற பெரிய அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மறு உத்தரவு வரும் வரை ஆர்டர்களை நிறுத்தி வைப்தாக இந்த நிறுவனங்களிடமிருந்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இமெயில் போயுள்ளதாம். டிரம்ப் விதித்த அதிக வரிச் சுமையை தாங்கள் ஏற்க தயாராக இல்லை என்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களே அதை ஏற்க வேண்டும் என்று அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறுகிறார்களாம்.


டிரம்ப் விதித்துள்ள அதிகப்படியான வரிவிதிப்பால், இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவு 30% முதல் 35% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவிற்கான ஆர்டர்களில் 40% முதல் 50% வரை குறைவு ஏற்படலாம், இதனால் சுமார் $4-5 பில்லியன் இழப்பு நமக்கு ஏற்படக்கூடும்.




இந்தியாவைப் பொறுத்தவரை, வெல்ஸ்பன் லிவிங், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுன்ட் மற்றும் ட்ரைடென்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக அளவிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அதாவது கிட்டத்தட்ட 40 முதல் 70 சதவீதம் அளவுக்கு இவர்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.


உலக அளவில் ஜவுளிப் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 6வது பெரிய நாடு இந்தியாதான். தற்போது டிரம்ப் விதித்துள்ள வரிகள் காரணமாக, இந்தியாவில் உள்ள பிசினஸ் வாய்ப்புகள் அண்டை நாடான வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளுக்குப் போகும் அபாயம் எழுந்துள்ளது.  அந்த நாடுகளுக்கு 20 சதவீத வரியை மட்டுமே டிரம்ப் விதித்துள்ளார் என்பதால் அந்த நாடுகள் இந்த நிலையை சாதமாக்கிக் கொள்ள முயலக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.


இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். கடந்த 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28% அமெரிக்காவிற்கே அனுப்பப்பட்டது. இதன் மதிப்பு $36.61 பில்லியன் ஆகும்.


ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவை மிரட்டி வந்தது அமெரிக்கா. ஆனால் இந்தியா அதை ஏற்காத காரணத்தால், கடுப்பான அதிபர் டிரம்ப், இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். இதில், 25% வரி வியாழக்கிழமை அமலுக்கு வந்தது, மீதமுள்ள 25% வரி ஆகஸ்ட் 28 முதல் அமலுக்கு வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

news

ரக்ஷா பந்தன் 2025.. உடன்பிறப்புகளின் இனிய பந்தம்.. பாசப் பிணைப்பின் அடையாளம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 08, 2025... இன்று செல்வாக்கு அதிகரிக்கும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்