அன்னம் கூவும்.. குருவி கீச்சிடும்.. குயில் கூவும்.. தேவாங்கு என்ன செய்யும் தெரியுமா?

Jan 21, 2026,10:58 AM IST

- சொ. மங்களேஸ்வரி


" அகவல்" எனும் பெயர்ச்சொல்லுக்கு அழைத்தல், கூவுதல், இசைத்தல், பாடுதல் என்று பொருள் உண்டு. 

பக்திபாடல் இசைப்பவர்களுக்கு "விநாயகர் அகவல்" என்னும் ஔவையார் எழுதிய பாடல்கள் உடனே நினைவிற்கு வரும். இலக்கணம் அறிந்தோருக்கு ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது என்பது நினைவிற்கு வரும். ஆனால் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களில் பெரிதும் நமக்கு உறுதுணையாகவும் வாழ்வின் பிணைப்பில் இருப்பவைகளும் ஆன பறவைகளும், விலங்குகளும் வெவ்வேறு ஒலியெழுப்பித் தங்கள் கூவலை, அழைத்தலை, பாடுதலை வெளிப்படுத்துகிறது. அவ்வாறு அவைகளின் ஒலியைக் குறிக்கும் மரபுச் சொற்களை அறிவோம்‌.




அன்னம் - கூவும்

ஆந்தை - அலறும்

காகம் - கரையும்

கிளி -பேசும் /மிழற்றும்

கோழி - கொக்கரிக்கும்

குருவி - கீச்சிடும்

குயில் -கூவும் 

சேவல் - கூவும் 

மயில் - அகவும்

புறா - குனுகும் 

வாத்து - கத்தும்

வானம்பாடி - பாடும் 

வண்டு - முரலும் 

தேனி - ரீங்காரமிடும் 

ஆடு - கத்தும்

எருது - எக்காளமிடும்

குதிரை - கனைக்கும்

குரங்கு - அலப்பும் சிங்கம் - முழங்கும் / கர்ஜிக்கும்

நரி  - ஊளையிடும் 

புலி - உறுமும் 

பூனை - சீறும் /கத்தும்

யானை - பிளிறும்

எலி - கீச்சிடும்

பசு - அழைக்கும் / கதறும் 

நாய் - குரைக்கும்

கழுதை - கத்தும்

பன்றி - உறுமும் /குமட்டும்

சிறுத்தை - உறுமும்

கரடி -கத்தும்

மான் - கனைக்கும்

அணில் - கீச்சிடும்

தவளை - கத்தும்

தேவாங்கு - அழும்

பாம்பு - சீறும் 

பல்லி - சொல்லும்


என்னங்க அகவல் பற்றித் தெரிஞ்சுக்கிட்டீங்களா.. மீண்டும் ஒரு சுவாரஸ்ய தகவலுடன் மறுபடியும் சந்திப்போம்.


(சொ. மங்களேஸ்வரி, எம்.ஏ., பி.எட்., எம்ஃபில், ஆங்கில பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

news

தாலாட்டும் நினைவுகள்!

news

முடியலடா.. முடியலையே!

news

முகத்துக்குப் போடலாம்.. மனதுக்குப் போடலாமா.. Massive Mask!

news

இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்