இன்று முதல் அக்னி நட்சத்திரம்.. உஷாரா வெளியில் போங்க மக்களே!

May 04, 2023,09:22 AM IST

சென்னை: கத்திரி வெயில் என்று செல்லமாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல்  தொடங்குகிறது.

வெயில் காலம் எனப்படும் கோடை காலம் உச்சத்தைத் தொடப் போகிறது என்பதன் அடையாளம்தான் அக்னி நட்சத்திர காலம். இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29ம் தேதி வரை நீடிக்கும்.

25 நாட்கள் நீடிக்கப்போகும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும். எனவே வெளியில் நடமாடுவோர் உரியவழிமுறைகளைப் பின்பற்றி உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

தேவையில்லாத வெளிநடமாட்டத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக பகல் பொழுதுகளில் அதிகம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சன்ஸ்டிரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாக நேரிடும். அதிக அளவில் தண்ணீர், இளநீர், தர்பூஸ், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்து எதையும் குடிக்காதீர்கள். அது உடல் நலனைப் பாதிக்கும். அதற்குப் பதில் இளநீ  ,மோர், மண்பானை தண்ணீர் போன்றவற்றை அருந்தலாம். அவை ஆரோக்கியத்திற்கு நல்லது. சூடான பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். சிக்கன் உணவையும் குறைத்தால் நல்லது. பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. வங்கக் கடலிலும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளது. எனவே இந்த முறை அக்னி நட்சத்திர காலகட்டம் சற்று வெம்மை குறைந்து காணப்படும் என்று எதிர்பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்