சென்னை: தமிழக முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற நோக்கில் ஏஜிஎஸ் குழுமம் இன்று முதல் கடலூரில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடங்கியுள்ளது.
இந்தத் திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பில் ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.

ஏஜிஎஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு பணிகளை தொடர்ந்து, தற்போது கடலூரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்குகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் கால் பதித்தது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தலைமையில், ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னை மகாபலிபுரம் சாலை, தி.நகர், மதுரவாயில், உள்ளிட்ட பல பகுதிகளில் 18 ஸ்கிரீன்களைக் கொண்ட திரையரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் புதுப்பொலிவுடன் தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திறந்து வைத்தார்.
கண் கவரும் 4கே டிஜிட்டல் ஸ்கிரீன், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் சவுண்ட் என அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் உலகத்தரம் வாய்ந்த தியேட்டராக இது மாற்றப்பட்டுள்ளது.

கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழக முழுவதும் ரசிகர்களுக்காக குறைந்த செலவில் திரையரங்கு அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}