எடப்பாடி பழனிச்சாமிக்கு "புரட்சித் தமிழர்" பட்டம்.. மதுரை மாநாட்டில் புதுப் பட்டம்!

Aug 20, 2023,09:44 AM IST
மதுரை: மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று  கோலாகலமாக நடந்தேறியது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது.

மண்டேலா நகர், ரிங் ரோட்டில் அதிமுகவின் எழுச்சி மாநாடு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.  கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், அமைதிப் புறாவைப் பறக்க விட்டும் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் தரப்பட்டது. தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். கட்சிக் கொடி நிறத்திலான பலூன்களும் அப்போது பறக்க விடப்பட்டது.

மாநாட்டில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதற்கு முன்பாக அவருக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் மாநாட்டு  அரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

நிரம்பி வழிந்த ஹோட்டல்கள்



மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் ரயில்கள், பஸ்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை வந்து குவிந்திருந்தனர். அனைவரும் தங்குவதற்காக விடுதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இதனால் மதுரை முழுவதும் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன.
      ‌
அதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் பெரும்  தடபுடலாக இதை ஏற்பாடு செய்திருந்தனர். மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு காலை சிற்றுண்டியும், மதியம் விதவிதமான உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவுகளை சமைப்பதற்காக சமையல்காரர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர் என பத்தாயிரம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

சூப்பர் சாப்பாடு



உணவு வழங்க உள்ள மூன்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் 10 லட்சம் பேர் குடிப்பதற்காக 300 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் பந்தல் அருகே ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திரைப்படங்களையும்,கட்சியின் வரலாறு,  சிறப்புகள் போன்ற நிகழ்வுகளையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு



மாநாட்டையொட்டி  மதுரை முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதுரை அதிமுக மாநாட்டால் மதுரை புறநகர்ப் பகுதிகளிலும், மதுரைக்குள்ளும் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.


சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்