மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வந்த சந்திரப்பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு நான்காவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரப்பாண்டியன். இவரது சொந்த ஊர் மாவூத்துப்பட்டி ஆகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இவரது மகள் வீடு லிங்கவாடியில் உள்ளது. மகளைப் பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து டூவீலரில் போயுள்ளார் சந்திரப்பாண்டியன். பாலமேட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக சந்திரப்பாண்டியனை அரிவாளால் வெட்டியது. இதில் சந்திரப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலமேடு போலீஸார் விரைந்து வந்து சந்திரப்பாண்டியன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. ஆனால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவூத்துப்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}