மழை பெய்யதான் செய்யும்.. மதுரையை தார்பாய் போட்டா மூட முடியும்.. கடிந்து கொண்ட செல்லூர் ராஜு!

Nov 09, 2024,01:04 PM IST

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை பார்வையிட்ட போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மழை பெய்ய தான் செய்யும். மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும் என அதிகாரிகளை கடிந்து பேசினார்.


மதுரையில் கடந்த 1970 ஆம் ஆண்டு 99 மில்லி மீட்டர் மழை பதிவானது.  54 வருடங்களுக்குப் பிறகு  அக்டோபர் மாதத்தில் 99.5 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டம் செல்லூர் தொகுதியில் இரண்டு மணி நேரத்திலேயே  4.5 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது.  அதேபோல் மழை நீர் அப்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமித்து சாலைகள் சேதமடைந்தன. 


இதனால் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் முறையாக இல்லாததால் தான்  மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் குடியிருப்பு பகுதிகள் சென்று, அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் அப்பகுதியை சீர் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில், மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏன் பணிகள் மந்தமாக நடக்கிறது..? மழை பெய்ய தான் செய்யும். அதற்கு மதுரையை தார்ப்பாய் போட்டு மூட முடியுமா.. என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,  நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை கூறி இருக்கிறது. அது முல்லை நகர் பகுதிகளுக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் உள்ள எல்லா இடங்களுக்கும் தான். இப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் மதுரை உயர்நீதிமன்ற கிளையை தான் அகற்ற வேண்டும். அது நீர் நிலையில்தான் இருக்கிறது.


30 நாட்களாக சாக்கடை நீர் நிறைந்துள்ளது. ஏன் அமைச்சர் வந்து பார்க்க கூடாதா. இன்னைக்கு தொற்றுநோய் வந்துவிட்டது. நான் சொன்ன மாதிரி எல்லா நோயும் பரவி வருகிறது. இங்குள்ள மக்கள் சாதாரண எளிய மக்கள். முதல்வர் முதலில் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். ஒவ்வொரு துறை ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டார். அப்ப மதுரையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகள் என்பதை கண்டறிந்து சொல்லி இருப்பார்கள். அதற்கான தீர்வுகளில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்த அரசு பெயரளவில் தான் நடைபெற்று வருகிறது. எங்ககிட்ட கூட்டணி பலம் இருக்கிறது என சொல்கிறது. இந்த அரசாங்கத்தின் மீது  இருக்கும் வெறுப்பு காரணமாக எல்லா கூட்டணி கட்சியினரும் வெள்ளத்தில் அடித்து செல்ல போகிறார்கள். இதுதான் நடக்கப் போகிறது என காரசாரமான விவாதங்களை முன் வைத்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஐபிஎல் 2026: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாபத் தோல்வி.. அடுத்து என்ன?

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

news

முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

news

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது

news

நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்