சங்கரன்கோவில்: அதிமுக என்பது அப்போது நெல்லிக்காய் மூட்டை.. நாங்க இல்லாட்டி சிதறிப் போயிருப்பாங்க. இபிஎஸ் இன்று பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக. அதை மறந்தால் அவர் நன்றி மறந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டது. அதை அதிமுகவினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாஜக அமைதி காக்கிறது. இந்த நிலையில் சங்கரன்கோவில் வந்த மூத்த தலைவர் எச். ராஜா இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
பட்டாசு வெடித்துக் கொண்டாட 10 பேர் போதும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அன்றைக்கு நாங்க ஒட்டி வைக்காட்டி அதிமுக நெல்லிக்காய் மூட்டை, சிதறிப் போயிருக்கும். அநாவாசியமாக பேசக் கூடாது. இன்று இபிஎஸ் பொறுப்பில் இருக்கிறார் என்றால் பாஜகதான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று அர்த்தம்.
அதிமுக நெல்லிக்காய் மூட்டை. போட்டுக் கயிற்கை கட்டி பிடிச்சு வச்சு கை வலிச்சது எங்களுக்குத்தான் தெரியும். ஆளாளுக்கு பேசறாங்களே.. அப்போது நான் சாட்சியா இருந்தேனே. இவர்களை இணைத்து வைத்த சாட்சியாக நான் இருந்தேன். அதனால பெரிய சாதனையெல்லாம் பண்ணதா நினைக்க வேண்டாம்.
மத்தியில் பிஜேபி ஆளுங்கட்சி.. மாநிலத்தில் திமுக ஆளுங்கட்சி. அதிமுக எங்கே இருக்கு.. சொல்லுங்க.. அதிமுக எங்கே இருக்கு. முடிந்தது முடிந்ததுன்னுா.. அதிமுக இன்றோடு முடிந்தது. அப்படித்தான் எடுத்துக்கணும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்டிப்பாக இதை பின்னர் உணர்வார்கள். அவர்களது செயல்களுக்குரிய பலனை அனுபவிப்பார்கள் என்றார் எச். ராஜா.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}