ஏர் இந்தியா விமானத்தில் அசிங்கம்.. பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு.. ஒரு மாத பயணத் தடை!

Jan 05, 2023,10:03 AM IST

புதுடில்லி : ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி மீது, குடி போதையில் இருந்த சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததற்காக அந்த போதை ஆசாமிக்கு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிசினஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்துள்ளார்.  இரவு உணவிற்கு பிறகு குறைவான வெளிச்சம் கொண்ட விளக்குகள் மட்டுமே எரிய விடப்பட்டுள்ளன. அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த போதை ஆசாமி, அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக வந்து சிறுநீர் கழித்துள்ளார்.




மற்றொரு பயணி நகர சொல்லும் வரை அந்த நபர் அதே இடத்திலேயே நின்றுள்ளார். இச்சம்பவம் பற்றி விமான ஊழியர்களிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தன்னுடைய உடை, ஷூ, பை என அனைத்தும் சிறுநீரால் நனைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு வேறு உடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொடுத்து, வேறு இடம் காலியாக இல்லாததால் அதே இருக்கையில் மீண்டும் உட்காரச் சொல்லி உள்ளனர்.

விமானம் டில்லியில் தரையிறங்கிய பிறகும் அந்த போதை நபர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், ஏர் இந்தியா குழுமத்தின் தலைவர் சந்திரசேகருக்கே புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இப்படி ஒரு அதிர்ச்சியான விமான பயணத்தை தான் சந்தித்தது இல்லை என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் தற்போது அந்த போதை ஆசாமிக்கு ஒரு மாதம் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை எப்போது விதிக்கப்பட்டது, எப்போது வரை நீடிக்கும் என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் இது முதல் கட்ட தண்டனை தான் என்றும் அடுத்த கட்டமாக விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் 2018 ம் ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவத்திற்காக ஏர் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. அதுவும் நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த விமானத்தில் தான் நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்திற்குச் சொந்தமானது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்